Tuesday, February 15, 2022

 உணர்வு 

                          கவிதை


அன்பு
அகந்தை
அழுகை
அமைதி
கோபம்
காதல்
காமம்
சிரிப்பு
புன்னகை
மௌனம்
பசி
வலி
என உணர்வுகள் நம் உள்ளத்தில்
உலா வருகிறது!


உணர்வுகளை சொற்கள் பிரதிபலிக்குமா!
மொழியில்லா கற்காலத்தில் கூட உணர்வுகள் வெளிபட தானே செய்தது!அப்படியிருக்க

சொல் அகராதியை கையாண்டு உணர்வை

முழுமையாக வெளி கொணர முடியுமா!

வார்த்தை முகமூடிகள் அணிந்து
உணர்வுகளை
முடக்குவது ஏன்?


உணர்வுகளை உணர்வால் தான் உணர முடியும்
என்பதை மறந்து மறுப்பது ஏன்?


இழை போன்ற
உணர்வை இதயத்தில் ஏந்தி உணர்ந்து 

மற்றவர்கள் இதயத்தில் வாழ்ந்து தான் பார்போமே!

No comments:

Post a Comment

அக்குபங்சர் ஒரு அறிமுக,ம் நிகழ்வு

  அ க்குபங்சர்  ஒரு அறிமுகம் நிகழ்வு .   அம்பத்தூர் மாநகராட்சி உயர் நிலை பள்ளி பாடி  குப்பம் ரோடு  அண்ணா நகர் மேற்கு சென்னை 40