Monday, March 28, 2022

                                                 நெவர் அகேன்

“ஒரு விண்ணப்பம் பூர்த்தி செய்ய தெரிகிறதா‌? முண்டம். நீ எல்லாம் படிச்ச முட்டாள். “தண்டம்” உன்னே போய் பூர்த்தி செய்ய சொன்னேன் பாரு. என்னை சொல்லனும் என கத்திக் கொண்டே இருக்கும் கணவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை “, வெண்பா.

கண்களில் வழியும் நீரை துடைத்த வண்ணம் பேசாமல் “பெண் ஏன் அடிமையானால்” பிடித்த பெரியாரின் புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு பிள்ளைகளின் அறைக்குள் சென்றாள்.  மகன் ரித்விக்  கல்லூரியில் முதல் ஆண்டு கணிதம் படிக்கிறான். மகள் காவியா 12ம்‌ வகுப்பு படிக்கிறாள். இருவரும் அவர்களின் பாட்டி வீட்டுக்கு சென்று உள்ளார்கள்.

ஒரு வங்கி விண்ணப்பம் பூர்த்தி செய்யதான் இத்தனை‌ ஆர்ப்பாட்டம்.

வெண்பா முதுநிலை படித்த பெண். அலுவலகத்தில் மேலாளர் பொறுப்பு ‌ ஆவணங்கள் தயாரிப்பு என்றால் அது வெண்பாதான். அத்தனை கச்சிதமாக இருக்கும்‌. அவள் ஒரு விண்ணப்பம் சரியாக பூர்த்தி செய்யவில்லை என்றுதான் இப்போது இந்த பேச்சு.

அலுவலகத்தில் இருக்கும்  வெண்பா வேறு. வீட்டில் இருக்கும் வெண்பா வேறு. அலுவலகத்தில் வெண்பா என்றாலே அனைவரின் பார்வையில் திறமைசாலி, புத்திசாலி, அன்பானவள் சிரித்த முகம், நல்ல குணமுடையவள், ஈகை குணம் கொண்டவள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மாறாக வீட்டில் அவள் ஒரு மக்கு, திமிர் பிடித்தவள், அடங்கா பிடாரி, உமனா மூஞ்சி,  இப்படி பல பட்டங்கள். ஆனால் வெண்பா என்பவள் ஒருத்தி தான். மற்றவர்கள் அவளை பார்க்கும் பார்வைதான் மாறுபடுகிறது.

அலுவலகத்தில் ராணி. வீட்டிற்குள் வந்தவுடன் அடிமையாகி விடுவாள். இது பெண் இனத்தின் சபாக்கேடு‌. இந்த சூழலிலும் வேலை செய்து கொண்டே சைக்காலஜி பட்டம் படித்து முடித்தாள்.

வீட்டு வேலைகள் சமைப்பது, தண்ணீர் எடுப்பது, துணி மிஷினில் போடுவது, காய்ந்த துணி எடுத்து மடித்து வைப்பது, கிரைண்டர் போடுவது, பெருக்கி மாப் போடுவது etc.,  இப்படி  பெரும்பாலும் பெண் இனம் செய்யும் வரிசையில் நமது வெண்பா. அனைத்து வேலைகளையும் சரியான திட்டமிடலுடன் அவளே முடித்து விடுவாள். பிள்ளைகள் பார்த்து கொள்வது, அலுவலகம் செல்வது, கவுன்சிலிங் பகுதி நேர வேலை என 24 மணி நேரத்தை  சரியாக பயன்படுத்தி கொள்வாள்.

கணவன் யுவன் பெற்றோர்கள் பார்த்து வைத்து செய்த திருமணம்தான். அப்பாவின் அன்பில் வளர்ந்தவள்.  ஆனால் திருமணத்திற்கு பின் எதற்கேடுத்தாலும் தவறு கண்டுபிடிக்கும் கணவன். அப்பாவிற்கு தான் மகிழ்ச்சியாக இல்லை என தெரிந்தால் சங்கடப்படுவார் என் ஓரே காரணத்தால், பழகிக் கொண்டாள். அது யுவனுக்கு வசதியாக போய்விட்டது. அதனின் தொடர்ச்சிதான்  இது…….

தன்னை பற்றிய சிந்தனையில். “பெண் ஏன் அடிமையானால்”  புத்தகத்தை கையில் வைத்தபடி அமர்ந்து இருந்தவளை  கைபேசியில் ஒலிக்க, அவள் தன்னிச்சையாக ஹலோ என்றாள்.

“லில்லி  பேசறேன் மேடம் உங்க கிளினிக் கிட்ட தான் இருக்கேன். தயவு செய்து வர முடியுமா?”

“மணி என்னமா? இரவு 10.00.  இந்த நேரத்திலா?.”

“கொஞ்சம் அவசரம் மேடம். பொண்னை கூட்டிட்டு வந்து இருக்கிறேன். பிளிஸ். மேடம் கொஞ்சம் வாங்க….'”

“சரி, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க கீழே வரேன்”, என சொல்லி அலைபேசியை வைத்தாள்.

கோபமாக இருக்கும் கணவன் யுவனிடம், “பேஷன்ட் வந்து இருக்காங்க. கிளினிக் போய்விட்டு வந்து விடுகிறேங்க…..”

“இந்த நேரத்திலயா…..”

“ஏதோ அவசரமா..’

“நீ பார்த்து என்ன சரியாக போது. உனக்கு வீட்டையே ஒழங்கா பார்த்துக்க தெரியலா……. நீ போய். சரி சரி போ. ….”

அவ்வாறு அவன் பேசுவது ஒன்றும் புதிதல்ல. திருமணம் முடிந்த நாள் முதல் இன்று வரை அது தொடர்கிறது.  ஆரம்பத்தில் அதை சமாளிக்க கடினமாக இருந்தது. பின்னர் அது பழகி விட்டது. 

கண்களில் வழியும் கண்ணீரை துடைத்து கொண்டு உடை மாற்றிக் கொண்டு கிளம்பினாள்.

லில்லி  அதற்குள் மறுபடியும் ஆழைத்தாள்‌ “மேடம் இன்னொரு முறை வருகிறேன். பாப்பா போகலாம் என்கிறாள்…”

வெண்பாவின் இதயம் படபடத்தது. “என்னம்மா இப்போ தானே கூப்பிட்ட இதோ கீழே வந்துட்டேன்.”

“இல்ல மேடம் பாப்பா போலாம் என்கிறாள்….”

வெண்பாவிற்கோ போகவில்லை என்றால் மறுபடியும் கணவனிடம் வசையடி வாங்க வேண்டி வருமே என்ற பயம் ஒருபுறம்.  “இதோ கீழே வந்துவிட்டேன்”,  என ஓடினாள்.

ஸ்கூட்டியோடு நின்ற வண்ணம் லில்லி பின்னால் அவளின் மகள் லைலா. ஒன்பதாம் வகுப்பு ‌படிக்கிறாள்.

வெண்பாவிற்கு  லைலாவை பற்றி தெரியும். சென்ற வாரமே லில்லி அலைபேசியில் அவளின் பிரச்சினைகளை பகிர்ந்து இருந்தாள். ஆனால் லைலாவிற்கு இது தெரியாது.

“நான் மேலே வரமாட்டேன்”

“அம்மி போலாம் போலாம்…. என ஸ்கூட்டியை விட்டு இறங்காமல் அழுதுகொண்டே இருந்தாள்.”

வெண்பா, “ஹைய் எப்படி இருக்கீங்க, என புன்னகையோடு அவள் அருகில் செல்ல….”

அவள் கண்களை மூடிக் கொண்டு “அம்மி பிளிஸ் பிளிஸ். வா போலாம்…. வா போலாம்”, என கண்களை மூடிக்கொண்டு சொல்லிக் கொண்டே இருந்தாள்….

வெண்பா, “லைலா நானும்  உங்க அம்மாவும் பிரண்ட்ஸ். முதல ஒன்னா வர்க் செய்தோம். ஆன்டிக்கு ஒரு ஹெல்ப் வேண்டும். அதைப் பற்றி பேசதான் அம்மா வந்து இருக்காங்க. பிளிஸ் எனக்காக உள்ளே வாம்மா. ஒரு ஃபைவ் மினிட்ஸ் நீங்கள் கிளம்பி விடலாம்”, என சொல்ல லைலாவிடம் மௌனம் உண்டானது.

“லில்லி, நீங்கள் இறங்கி வாங்க. லைலா உள்ளே வருவாங்க”, என கூறி கிளினிக்கை திறந்து உள்ளே சென்றாள் வெண்பா.

அவளை தொடர்ந்து லில்லி செல்ல தயக்கத்துடன் லைலா லில்லியின் கைகளை பற்றி கொண்டு பின் தொடர்ந்தாள்.

“வா லில்லி, உட்காரு மா”

“லைலா அம்மா பக்கத்தில்‌ உட்காருமா..”

“தயங்கி தயங்கி அமர்ந்தாள்.”

“சொல்லு லில்லி  எப்படி இருக்கீங்க”.

“நல்லாயிருக்கேன் மேடம் என‌ உதடுகள் மட்டுமே உச்சரிக்க, கண்களில் அருவியாக கண்ணீர்”.

“என்னம்மா என்னாச்சு”

“லைலா மகிழ்ச்சியாக இல்லை மேடம்.”

அவர் மில்டிரி ஆபிசர். உங்களுக்கு தெரியும். நானும் லைலாவும் தான் வீட்டில் இருக்கிறோம். அனைத்து வேலைகளையும் நான் தான் செய்ய வேண்டும். அலுவலகத்தில் வேலை ப்ளூ அதிகமாக உள்ளது. கொரானா கட்டுபாடு. ஆட்குறைப்பு வேறு நடக்கிறது. எங்கு என் வேலை பறிபோகுமா என்ற அச்சத்தோடு பயணிக்கிறேன். இது அத்தனையும் ஏன்? என் மகள்  மகிழ்ச்சியாக இருக்கதான். இது அவளுக்கு புரியவில்லை என அழ ஆரம்பித்தாள்.

“லைலா அம்மாவின் கைகளை பிடித்துகொண்டு அம்மி don’t cry…. Don’t cry என்றாள்.”

“லைலா உனக்கு என்னடா பிரச்சினை? நீங்கள் ஏன் மகிழ்ச்சியாக இல்லை.”

அமைதி மட்டுமே பதிலாக இருந்தது.

தொடர் போராட்டத்திற்கு பிறகு மெதுவாக  பேச ஆரம்பித்தாள்

“மம்மி என்னை பாட்டி வீட்டில் வீட்டு விட்டு ஆபிஸ் செல்கிறார்கள்.”

“சரி…”ஆனால் அங்கு எனக்கு சரியான மதிப்பு அளிக்க மாட்டேன் என்கிறார்கள்.

“அப்படியா?”

அம்மா “அட்சஸ்ட் பண்ணிக்கோ என என்னைதான் சொல்கிறார்கள்”

“நான் ஏன் அட்சஸ்ட் ஆகனும். நான் தப்பு செய்யாத போது. அட்சஸ்ட் செய்து கொண்டே போனால் நான் எப்படி ஆண்டி இருப்பேன்”.

“கரக்ட் தானே!”

லைலா வெண்பா அவளுக்கு தான் ஆதர்வாக பேசுகிறாள் என உணர்ந்தாள்..

வெண்பா மேல் நம்பிக்கை பிறந்தது….

ஆண்டி ஆன்லைன் வகுப்பு நடக்கும் போது பெரியம்மா பையன் அண்ணன் பிரேம் டிவியை சத்தமாக வைக்கிறான்.

அவனை யாரும் கேட்கவே மாட்டேன் என்கிறார்கள். என்னால் கிளாஸ்ஸை கவனிக்க  முடியவில்லை.

அது மட்டும் அல்ல, பாட்டி நடுவில் வந்து, நான் என்ன செய்கிறேன் என பார்த்து விட்டு செல்கிறார்கள்.

என்னை நம்ப மறுக்கிறார்கள்.

அம்மாவிடம் சொன்னால், அட்ஜஸ்ட் செய்து கொள் என்கிறார்கள்.

“I  will loose my originality, my uniqueness if I compromise”.

“நான் தவறாக இருந்தால் நான் திருத்தி கொள்கிறேன். இல்லையெனில்  why should I?”

அனைத்து விஷயங்களுக்கு காம்பிரமைஸ் ஆனால் அம்மா மாதிரி தான் ஆண்டி தன்னந்தனியாக கஷ்டப்பட வேண்டும்.

“No means no aunty”

இப்போ கூட எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆண்டி. அதனால் எனக்கு இங்கு வர வேண்டிய அவசியமில்லை என பளிச் என்று பேசும் லைலாவை பார்த்த வெண்பா ஒரு நிமிடம் மௌனம் ஆனாள்.

இங்கு கவுன்சிலிங் யாருக்கு தேவை‌. லைலாவிற்கா, அல்ல்து தனக்கும், லில்லிக்கா?

லைலா சரியாக தானே உள்ளாள்.

யார் யாருக்கு கவுன்சிலிங் கொடுப்பது.

பெண் பிள்ளைகள் “எண்ண சுதந்திரம்” கொண்டு வளர்ந்தால் அவர்களின்  வாழ்க்கையில் அவளுக்கு நடக்கும் அநீதியை அவள் கடந்து வெற்றி அடைவாள்.

தன் பெற்றோர் தனக்கு செய்தவற்றை லில்லிக்கு அவளின் பெற்றோர் செய்த தவற்றை இருவரும் சேர்ந்து லைலாவிற்கு செய்ய கூடாது.

“தவறு என்றால் திருத்திக் கொள்ளலாம். சரி எனும் போது ஏன் காம்பிரமெஸ் ஆக வேண்டும்.”

“கரெக்ட் செல்லம்”

நான் மம்மி கிட்ட சொல்றேன்.

“கொஞ்சம் நீங்க  உள்ள மீன் தொட்டி இருக்கு போய் பாருங்க, நான் மம்மியிடம் ஆபிஸ் பற்றி பேசிட்டு, உங்களையும் திட்ட வேண்டாம் என சொல்கிறேன்”, என்றாள்.

லைலா மீனுடன் விளையாட செல்ல…..

வெண்பா லில்லியை பார்த்து, “மாற வேண்டியது லைலா இல்லை,  லில்லி, “நாம தான்”  என  லில்லிக்கு புரியும்படி எடுத்து உரைத்தாள்.

சிறிது நேரத்தில் இருவரும் கிளம்பினார்கள்.  லைலா மகிழ்ச்சியாக ஒரு சிரிப்பை வெண்பாவை பார்த்து உதிர்த்து  bye aunty  என்றாள்.

“bye ma” கூறி அவர்கள் கிளம்பியதும் சற்று நேரம் அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

எனோ அவள் நினைவில்  பல் எண்ண ஒட்டங்கள் இன்றைய நிலைக்கு நாம் தான் காரணம்.

நாம் ஏன் கோழையாக இருக்கிறோம் என பல கேள்விகள் மனதில்…… இதற்கடையில் எதிர்வீட்டில் புதுமைபெண் பட பாடல் ஒலித்துக் கொண்டு இருந்தது. அமைதியாக அமர்ந்து முழுமையாக கேட்க துவங்கினாள். ரேவதி கதாபாத்திரம் அவளின் கண் முன்னே!

ஓஒருதென்றல்புயலாகிவருமே
ஓஒருதெய்வம்படிதாண்டிவருமே
காலதேவனின்தர்மஎல்லைகள்மாறுகின்றதே
காலதேவனின்தர்மஎல்லைகள்மாறுகின்றதே

வீட்டிற்கு வந்தாள், வெண்பா

“தண்டம்” என்ன இவ்வளவு நேரம்? என்ற கணவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள். இதுவரை அப்படி ஒரு பார்வையை அவன் பார்த்ததில்லை.

முதலில் என்னை “தண்டம்” என்று எல்லாம் சொல்லும் வேலை வேண்டாம். பிறகு விண்ணப்பத்தை நான் சரியாக தான் பூர்த்தி செய்துள்ளேன், நீங்கள் சரியாக பாருங்கள்.

“அப்புறம் இதன் பிறகு என்னை மக்கு முட்டாள் என வசைப்பாடுவதை நிறுத்தி கொள்ளுங்கள். “

“Never again”  “நெவர் அகேன்”

ஆணின் “எண்ண கழிப்பறையாக” பயணித்தது போதும். முக்கியமாக அவளின் வாழ்வியல் முறைதான் தன் மகள் காவியாவிற்கு வழிகாட்டலாக அமையும் என்பதை நன்கு உணர்ந்தவளாய், உள்ளே சென்றாள்.

வெண்பாவா ! இது என விகித்து நின்றான் யுவன்.

Friday, March 18, 2022

 பாவத்தின் சம்பளம் மரணம் மட்டுமல்ல 

அசைவற்று மேரி அருகே அமர்ந்து இருந்தாள் தெரேசா. மேரி எந்த ஒரு சலணமும் இல்லாமல் கோமா நிலையில் படுத்து இருந்தார். முகத்தில் ஒரு மாஸ்க், வெண்டிலேட்டர் ஒரு புறம். சுயம் இழந்த நிலை, விட்டிலேயே மருத்துவமனை சடங்குகள், அரங்கேறிக் கொண்டு இருந்தது.

தெரேசாவின் நினைவுகள் சற்றே பின்நோக்கி சென்றது. அந்த மருத்துவமனையில் மேரி ஸிஸ்டர் என்றால் அனைவருக்கும் அவ்வளவு பிரியம்.

மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு கூட அவரின் மேல் ஒரு நல்ல மதிப்பு. அது சென்னையில் ஒரு பிரபலமான மருத்துவமனை. முக்கியமாக ஒவ்வொரு வருடமும் “இலவச செக்கப்” செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு அந்த மருத்துவமணையை பிரபலமாக்கியது. இலவசம் தானே என பெரும்பால மக்கள் போய் செக்கப் செய்துவிட்டு வந்து விடலாம் என கூட்டம் கூட்டமாக வருவது இயல்பு தானே..

தெரேசா அந்த மருத்துவமணையில்தான் மேரியை முதன் முதலில் சந்தித்தாள். அந்த மருத்துவமனையின் யார் முதலில் வேலைக்கு சேர்ந்தாலும் மேரி சிஸ்டர்தான் அவர்களை நேர்காணல் செய்து பணியில் அமர்த்த உத்தரவு பிறப்பிப்பார்

தெரேசாவின் சொந்த ஊர் குடியாத்தம் செவிலியர் பணியை மிகவும் விருப்பத்தோடு படித்து சென்னையில் பணிபுரிய ஆவலோடு இருந்தாள். இந்த பிரபலமான மருத்துவமனையில் சேர்ந்தால் பலருக்கு சேவை செய்ய முடியும் என்ற காரணத்தினால் கண்டிப்பாக இந்த நேர்காணலில் வெற்றிபெற வேண்டும் என்ற முடிவோடு அமர்ந்திருந்தாள்.

முக்கியமாக அவளின் அம்மா லக்ஷ்மி ஒரு மரபு வழி மருத்துவர். நாடி பார்த்து மூலிகை மருந்துகள் தருவார். வருகின்ற பெரும்பாலும் வரும் நோயாளிகள் குணம் அடைந்து ஆரோக்கியமாக செல்வார்கள். அதனால்தான் தெராவிற்கு மருத்துவத்தின்மேல் நாட்டம் வந்ததது. அதனின் தொடர்ச்சிதான் இன்று அவளை இங்கு அமர்த்தி உள்ளது.

20 ஆம் நூற்றாண்டு அறிவியல் வளர்ச்சியின் உச்சம். மருத்துவமணைகள் இல்லாத தெருவுகளே இல்லை என சொல்லாம். ஆரோக்கியத்தைதான் தேடலில் விட்டது.

நேர்காணலில் எப்போது அழைப்பார்கள் என காத்திருந்த தெரேசாவிற்கு, வாட் பை வந்து , “அடுத்தது தெரேசா என்ற குரல் அவளின் நினைவுகளை திருப்பியது”.

“நான் தான் அண்ணா என ஒருவித பரபரப்புடன் எழுந்தாள்,” தெரேசா.

“நீங்களா மா”

“ஆமாம்”, அண்ணா

“சர்டிபிக்கேட் எல்லாம் எடுத்துக் கொண்டு உள்ள போங்க மா,: என்றார்.

“பரபரப்பு வெளியே தெரியாமல், குட் மார்னிங் மேடம்” என்றாள். மேரியின் கணிவான முகம் அவளை பார்த்த நொடியே, அவர்கள் மேல் நம்பிக்கையையும் அன்பையையும் வரவழைத்தது.

“வா மா குட் மார்னிங்:

“உட்காரு மா”.

“தெங்கியூ மேடம்”

“தொடர் கேள்வி கனைகள் தொடுத்த படி இருந்தாள் மேரி.”

“அனைத்திற்கும் விடைகளை சட்டு சட்டென அளித்த விதம், தெரேசாவின் குழந்தை முகம் மேரியையும் கவர்ந்தது.”

“ஓகே மா.. , கொஞ்சம் வையிட் பண்ணுங்க . தலைமை நிர்வாகியின் ஒரு நேர்காணல் உள்ளது. அதிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை உறுதி வெளியே சிறிது நேரம் காத்திருங்கள் என அடுத்த நபருக்கு அழைப்பு விடபட்டது”
அந்த நேர்காணலும் முடிந்தது.

“அப்பாயிண்மெண்ட் ஆர்டர் வாங்கிகிட்டு போங்க. அடுத்த மாதம் ஒண்ணாம் தேதி பணியில் சேர்ந்து விடுங்கள், என்றார்”

மிகவும் மகிழ்ச்சியோடு பணியில் சேர்ந்தாள் தெரேசா. முதலில் டிரைனிங் பிரியட். ஒரு வருடம் அனைத்து வார்டுகளிலும் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. பெயருக்கு ஏற்றாற் போல் அன்பும் கணிவும் தெரேசாவோடு பிணைந்து இருந்தது. வருகின்ற நோயாளிகளுக்கு மகளாக, தமக்கைமாக இருந்து சேவை செய்வதில் தனது முழு கவனத்தையும் செலுத்தினாள். அவளின் அந்த ஈடுபாடு அந்த மருத்துவமனையில் அவளுக்கு ஒரு அங்கீகாரத்தை உருவாக்கியது.

ஐ. சி. யூ வார்ட்டில் ஷயூடல் கிடைத்த போது அந்த மருத்துவமனையில் பணி புரிய வாய்ப்பு கிடைத்தற்கு மிகவும் பெருமைபட்டாள். தினமும் அலைபேசியில் தனது தாயிடம் மருத்துவமனையின் சிறப்பையும் அந்த மருத்துவமனையால் எத்தனை பேர் குணமாகி செல்கிறார்கள் என சொல்லிவிட்டுதான் தூங்க போவாள்.

அன்று வெள்ளிக்கிழமை காலை வந்து அட்டன்டஸ் கையெழுத்து செய்துவிட்டு உள்ளே நுழைந்தவளுக்கு தோழி நர்மதாவின் குரல் அவளை திருப்பியது.

“ஒரு சந்தோஷமான செய்தி தெரேசா”

“சொல்லுடா.”.

“என்னவென்று கெஸ் செய் பார்போம்”

“என்னவென்று சொல்லு பா”

“சொல்லட்டுமா”

“சொல்லு மா பிளிஸ்”

உனக்கு பிடித்த மேரி மேடமுடன் இன்று முதல் உனது பணி என்றாள்.

அவ்வளவுதான் தெரேசாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அவளின் கணவு நிறைவானது.

உடனே அம்மாவிற்கு போன் செய்து அம்மா நான் நினைத்தபடி மேரி மேடம் டிபார்ட்மெண்ட் என்றாள். மகிழ்சியாக நாட்கள் கடந்து போயின.

அன்று இலவச பரிசோதனை நாள். நான் மேரி மேடமுடன் சேர்ந்து மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்த போகிறேன் என சொல்லி கொண்டு இருந்தாள். வழக்கம் போல் இலவச சிகிச்சை துவங்கியது.

வருகின்றன மக்களை வரிசையில் அமர்த்தி ஒவ்வொரு ஆய்வகத்திற்குள் அழைத்து சென்று சோதனை எடுத்து அவர்களை வழிநடத்தும் பணி அவளுடையது. பின்னர் அனைத்து சோதனை முடிவுகளையும் பையிலில் போட்டு தலைமை மருத்துவரிடம் அழைத்துச் சென்று அமர வைக்கும் பணி அவளுடையது.

ஆய்வு முடிவுகள் பிரிண்ட் ஆகி வர மிகவும் தாமதம் ஆனது. ஆய்வு கூடத்தில் ஆய்வுகள் எடுக்கும் நேரத்தைவிட ஏன் முடிவுகள் வர தாமதமாகிறது என ஆய்வகத்தில் கேட்டு கொண்டு இருந்தாள். தெரேசாவின் மாமா ஜான் திடிரென சென்னை ஒரு வேளை விஷயமாக வந்து இருந்தார்.

அப்படியே தெரேசாவின் பார்த்து விட்டு போகலாம் என மருத்துவமனையில் வந்து காத்து இருந்தார். தெரேசா மாமாவின் வரவால் மிகவும் மகிழ்ந்து போனாள். மேரி மேடமிடம் அனுமதி வாங்கி கொண்டு மாமா வந்து இருக்காங்க மேடம் ஒரு அரை மணி நேரத்தில் வந்து விடுகிறேன் என அனுமதி வாங்கி கொண்டு, வாங்க மாமா வெளியே போய் டிபன் சாப்பிட்டு வரலாம் என்றாள்.

“வாம்மா போலாம் என இருவரும் வெளியே போய் அவளுக்கு பிடித்த பொங்கல் வடை வாங்கி கொடுத்தார்” மாமா.

“மாமா நீங்கள் இட்லி சாம்பார் வாங்கிக் கொள்ளுங்கள் , இங்கு சூப்பராக இருக்கும் “,என்றாள்.

“சரி” என்றார்.

“என்னம்மா ஆஸ்பத்திரியில் இவ்வளவு கூட்டம்”, என்றார்.

அதுவா மாமா, வருடம் ஒரு முறை எங்கள் ஆஸ்பத்திரியில் இலவசமாக ஆய்வு செய்வார்கள். Bp, sugar, ECG என… சட்டென்று “மாமா நீங்கள் கூட டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்களேன்”

“எனக்கு எதுக்குமா நான் நன்றாக தானே இருக்கிறேன்.”

“இல்லை மாமா எப்படியும் சென்னை வந்து இருக்கீங்க”.

“பாருங்கள் இது எனக்கு முன்பே தோன்றவில்லை.”

“வேண்டாம் மா… “

“நான் அத்தைக்கு போன் செய்கிறேன்… என சொல்லி அனுமதி வாங்கி, வாங்க போலாம் என கட்டாயப்படுத்தி அழைத்து சென்றாள்.

மாமாவிற்கு எல்லா டெஸ்டும் எடுத்தார்கள். அதிர்ச்சியான விஷயம் மாமாவிற்கு இதயத்தில் பிளாக்ம் உடனே சர்ஜரி செய்ய வேண்டும் என் சொன்னார்கள். ஒரே வாரத்தில், நல்லா வந்த மாமாவிற்கு, ஆப்ரேஷன் செய்துகூட காப்பாற்ற முடியவில்லை. அத்தை கேட்ட கேள்விக்கு பதில் இல்லை தெரேசாவிடம்.

அன்று அவரை டெஸ்ட் எடுக்க சொல்லி இருக்க கூடாதா என யோசித்து யோசித்து.. ஒன்றும் புரியவில்லை. அனைத்து காரியமும் முடிந்து வேலைக்கு வந்தாள். மாமாவின் மரணம் அவளை அந்த மருத்துவமணை மேல் சந்தேகம் கொள்ள செய்தது. அவளின் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.

வார்டு பாய் மணி அண்ணா வயதில் மூத்தவர். மெல்லமாக தெரேசா இங்கே வா மா என்றார்,

“என்னங்க அப்பா…”

“எல்லா ரிப்போர்டடும் மேரி ஸிஸ்டர் மற்றும் மருத்துவமணை நிர்வாகி பார்த்துதான் வெளிவரும்”.

“நல்லது தானே பா … என்ற தெராசாவிடம்….. இல்லமா…”

“ரிப்போர்ட் எடுத்தது வராதது….. நிர்வாகம் சொல்வதுதான் வரும்… ”

“புரியல பா….”

இந்த முதல் வரவேற்பறையில் நுழையும் மனிதர்கள் இலவசமாக நோயாய்களை தாங்கி செல்லும் நோயாளியாக அனுப்படுகிறார்கள்.

அதை கேட்டவுடன், தெரேசா கண் எதிரே இருந்த மேரி சிலை விரிசல் விட்டது.

“வேலைக்காரன்” சிவகார்த்திகேயன் நடித்த படம் கண்முன்னே காட்சி படிவமாக அரங்கேறியது.

விசுவாசம் என்ற ஒரு வார்த்தை பல மனிதனை நோயாளியாக மாற்றிவிட்டது. அதுமட்டும் அல்ல உயிரை பலி வாங்கிவிடுகிறது, விதை விதைப்பில் நஞ்சை கலந்து கொடுத்து அதன் மகசூலை பெருக்க பின்னர் மருந்துகள் கொடுப்பது போல? ஆரோக்கியமான மனிதனுக்கு இலவச பரிசோதனை என்ற பெயரில் நோயை உண்டாக்கி அவர்களை நோயாளியாக மாற்றுவது மருத்துவமா…?

சுயலாபத்திற்காக சுயநலமாக நடந்து கொண்ட மருத்துவ நிர்வாகிகள், உடன் பணிபுரிபவர்கள் என் எல்லோரும் கல்லாக தெரிந்தார்கள் தெராசவிற்கு, அன்றே வேலையை ராஜினமா செய்துவிட்டு, குடியாத்தம் சென்றிவிட்டாள். மருத்துவம் ஒரு சேவை. பணம் சம்பாதிப்பது மட்டும் அவர்களது நோக்கமாக இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். அந்த மாதிரி மருத்துவமணையில் பணியில் சேர்ந்து மகிழ்ச்சியாக பணி புரிந்துவந்தாள்.

வருடங்கள் கடந்தது. ஒரு நாள் உடன் பணி புரிந்த நர்மதாதான். மேரி சிஸ்டர் நிலையை சொன்னாள். ஆதனால் தான் சென்னை வந்து மேரியை பார்க்க வந்தாள். ஜோசப், தெரேசாவிடம், அம்மா ஒரு கல்யாணத்திற்கு போய் இருந்தார்கள். திடீர் என்று நெஞ்சு வலி வந்து இருக்கு. சொந்தகாரர்கள் ஒரு தப்பான ஆஸ்பட்டலில் அனுமதித்து விட்டார்கள் நாங்களும் அப்போ ஊரில் இல்லை.. மருத்துவர் ஒருவர் எங்க சொந்தகார்களிடம் கவலை வேண்டாம், அவுங்க நன்றாக இருக்கிறார்கள்.

இப்போது அறிவியல் எவ்வளவோ வளர்ச்சி அடைந்து உள்ளது. மேஜர் ஆடக் ஓப்பன் ஆர்ட் சர்ஜரி செய்து விடுவதுதான் நல்லது. எங்களிடம் ஒப்படைத்து விட்டீர்கள் இல்லை. நாங்கள் பார்த்து கொள்கிறோம். பணத்திற்கு மட்டும் ஏற்பாடு செய்யுங்கள் என்றார்கள்.

நாங்களும் பணத்திற்கு ஏற்பாடு செய்து ஓப்பன் ஆர்ட் சர்ஜரியும் செய்தார்கள். ஆனால் சர்ஜரி பெயிலியர் அதை அவர்கள் மறைத்துவிட்டார்கள். அம்மா கோமா நிலைக்கு சென்றுவிட்டார்கள். இரண்டு வருடங்களாக இப்படியேதான் இருக்கிறார்கள் என்றார். ஒரு மரணத்தில் அவர்கள் செய்த பாவ கணக்குகள் சரி பார்க்கப்படும் என நாம் அறிந்ததே. அதே சமயத்தில் பாவ கணக்கு அதிகமானால் மரணம் கூட அவர்களுக்கு பிராட் சித்தம் தர யோசிக்கிறது நிஜம்தான் போல…..

தெரேசா, சரிங்க அம்மாவை பார்த்துக் கொள்ளுங்கள், வருகிறேன் என வெளியே யோசித்தபடி “பாவத்தின் சம்பளம் மரணம் மட்டுமல்லா: என்ற வாசகம் நினைவலையில்……”

“ஆட்டோ சென்டரல் போகனும். ஆட்டோ வருமா”, என்றாள்

“வாங்க மா”, என ஆட்டோ கிளம்பியது.

“தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற கணியனின் வரிகள் ஆட்டோவில் எழுதப்பட்டு இருந்தது.

Thursday, March 17, 2022



உடலே மருத்துவர்

KUMARAMANGALAM
AMBUR






 

Sunday, March 13, 2022

                                                                ஒன்றல்ல 

                            கவிதை

கோபமும் குரோதமும் ஒன்றல்ல
காதலும் காமமும் ஒன்றல்ல
கவவையும் கஷ்டமும் ஒன்றல்ல
கஞ்சதனமும் சிக்கனமும் ஒன்றல்ல
பசியும் பட்டினியும் ஒன்றல்ல
சிரிப்பும் புன்னகையும் ஒன்றல்ல
மருந்தும் மருத்துவமும் ஒன்றல்ல
வரலாறும் வரலாற்று நூல்களும் ஒன்றல்ல
ஊடக செய்திகளும் உண்மை நிகழ்வுகளும் ஒன்றல்ல
நீதியும் நீதிமன்ற தீர்ப்பும் ஒன்றல்ல
பார்வைகளும் காட்சிகளும் ஒன்றல்ல
சொல்லும் வாக்குறுதியும் ஒன்றல்ல
நினைவுகளும் சிந்தனைகளும் ஒன்றல்ல
போரும் புரட்சியும் ஒன்றல்ல
அடிமைத்தனமும் அகிம்சையும் ஒன்றல்ல
கவி படைப்பவனும் மூன்டாசு கவி பாரதியும் ஒன்றல்ல
போதையும் போதை பழக்கமும் ஒன்றல்ல
மரணமும் இறப்பும் ஒன்றல்ல!
உளவியல் அகழாய்வு செய்து ஊடே சென்று பார்த்தால்
மனதின் சித்தாந்தம் புலப்படும்!

Friday, March 11, 2022

 மாற்றம் வேண்டும் 

                     கவிதை

மாற்றமில்லை மாற்றமில்லை
சமூகத்தில்
மாற்றமில்லை!

மாற்றமில்லை மாற்றமில்லை
மனிதனிடத்தில்
மாற்றமில்லை!

மாற்றமில்லை மாற்றமில்லை
அடிமைத்தனத்தில்
மாற்றமில்லை

மாற்றமில்லை மாற்றமில்லை
அடக்கி ஆளும் வர்கத்தில்
மாற்றமில்லை!

மாற்றமில்லை மாற்றமில்லை
ஜாதி பிரிவினையில்
மாற்றமில்லை!

மாற்றமில்லை மாற்றமில்லை
பெண்னின் நிலையில்
மாற்றமில்லை!

மாற்றமில்லை மாற்றமில்லை
பட்டினியில்
மாற்றமில்லை!

மாற்றமில்லை மாற்றமில்லை
பஞ்சத்தில்
மாற்றமில்லை!

முன்டாசு கவியே!
உன் புரட்சி சிந்தனைகளை ஏட்டில் மட்டுமே
நூற்றாண்டை கொண்டாடுகிறது இவ்வையகம்!
நம்பிவிடாதே!

மாற்றமே எழுச்சி
மாற்றமே மலர்ச்சி
மாற்றமே உயிர்ப்பு
நீ கண்ட நிஜ மாற்றத்தை
சமூகத்தில் சுடர்விட
சிந்தனை செழிக்க
ஓவ்வொரு பெண்ணின் கருவிலும்
கருவாய், உருவாய், உயிராய், சூடராய்
அக்கினி பிழம்பாய், தகதகவென ஜனித்து
வா பாரதி வா!

Tuesday, March 8, 2022



உடலே மருத்துவர்
(மகளிர் தின விழா)
ஸ்ரீ விவேகானந்தர் வித்யாசாலை 
அலமாதி
சென்னை























 

அக்குபங்சர் ஒரு அறிமுக,ம் நிகழ்வு

  அ க்குபங்சர்  ஒரு அறிமுகம் நிகழ்வு .   அம்பத்தூர் மாநகராட்சி உயர் நிலை பள்ளி பாடி  குப்பம் ரோடு  அண்ணா நகர் மேற்கு சென்னை 40