Sunday, December 19, 2021

 

ஒற்றை வரி கதைகள்



கதை 1:
குடிசையில், சில நாட்களில் கடைசி பருக்கை, பல நாட்களில் ஒரு சொம்பு தண்ணீர் அம்மாவின் உணவானது.

கதை 2:
சமுக சேவகர்விருது வழங்கும் விழாவில் விருது பெற்றுக் கொண்டு, நேரே மாத தவணை கட்ட அப்பா இருக்கும் முதியோர் இல்லம் சென்றார் மகன்.

கதை 3:
ப்ளூ கிராஸ் ஆர்வலர்வீட்டில் விருந்து. மட்டன் பிரியாணி, சிக்கன் 65.

கதை 4:
லஞ்ச ஒழிப்பு அதிகாரி டொனேஷன் கொடுத்து தன் பிள்ளைக்கு L.K.G அனுமதி வாங்கினார் தனியார் பள்ளியில்.

கதை 5:
ஃபாரஸ்ட் ஆபிசர் வீட்டில், கதவுகள், ஜன்னல்கள், மேசை, கட்டில், தேக்கு மர பலகையில் பளபளத்தன.

கதை 6:
ஸ்டார் ஓட்டல் முதலாளிக்கு வீட்டில் இருந்து மதிய உணவு வந்தது

கதை 7:
     பள்ளி பையை போட்டு விட்டு குப்பை அள்ளும் பையை எடுத்தான்          5 வயது சிறுவன் அம்மாவின் ஈம சடங்குகள் முடிந்த சில தினங்களில்.


No comments:

Post a Comment

அக்குபங்சர் ஒரு அறிமுக,ம் நிகழ்வு

  அ க்குபங்சர்  ஒரு அறிமுகம் நிகழ்வு .   அம்பத்தூர் மாநகராட்சி உயர் நிலை பள்ளி பாடி  குப்பம் ரோடு  அண்ணா நகர் மேற்கு சென்னை 40